இந்து சமய கோயில்களின் தாயகம் என கருதப்படும் தமிழ்நாட்டில், மொத்தமாக சுமார் 38,615 கோயில்கள் இருக்கின்றன. இந்தியாவின் பிற எந்த மாநிலத்தை விடவும் தமிழ்நாட்டிலேயே கோயில்களின் எண்ணிக்கை அதிகம். உலகளவில் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், மகாபலிபுரம் கடற்கரை கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் போன்றவை இதில் குறிப்பிடத்தக்கது ஆகும்.