ஜல் ஜீவன் திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.3,112 கோடி நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், மத்திய அரசு குறைவான நிதி வழங்கிய போதிலும், திட்டத்தை காலத்தில் நிறைவேற்ற தமிழக அரசு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2,550 கோடி ஒதுக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.