'அம்மன் சிலையில் வடிந்த பால்'- குவிந்த பக்தர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அருள்மிகு கயிலாதநாதர் உடனுறை உமாமகேஸ்வரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மூலவர் உமா மகேஸ்வரி அம்மன் சிலையின் மார்பு பகுதியில் இருந்து சொட்டு சொட்டாக பால் வடிந்ததாக கோயில் அர்ச்சகர் கூறியுள்ளார். முதலில் அபிஷேகம் செய்த பாலாக இருக்கலாம் என 10 குடம் நீர் ஊற்றியும் மீண்டும் பால் வடிந்ததாக கூறியுள்ளார். இதனை அறிந்த பக்தர்கள் இந்த காட்சியை காண கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.

தொடர்புடைய செய்தி