நடமாடும் மருத்துவ சேவையில் தமிழ்நாடு முதலிடம்

இந்தியாவில் செயல்படும் நடமாடும் மருத்துவ சேவை வாகனங்கள் (MMUs) இயக்கத்தில் தமிழ்நாடு முன்னிலையில் திகழ்கிறது. மொத்தம் 425 வாகனங்களுடன் முதலிடம் பிடித்துள்ள தமிழ்நாடு, கிராமப்புற மற்றும் தூர இடங்களில் வசிக்கும் மக்களுக்கு உடனடி மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த சாதனை, தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையின் முன்னேற்றத்தையும் மக்கள் நலனில் கொண்டுள்ள அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்தி