இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளனம் சார்பில் எச்.சி.எல். 3-வது தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேருபார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வந்தது. இதில் கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த செந் தில்குமார்-ஜோஸ்னா சின்னப்பா சாம்பி யன் பட்டத்தை கைப்பற்றினர். ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் தமிழகத்தின் செந்தில்குமார்-அபய்சிங் கூட்டணி மராட்டியத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.