செயற்கை உர விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறும் விவசாயிகளுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. மேலும், இயற்கையாக விளைவிக்கப்படும் பாரம்பரிய அரிசி, மசாலா பொருட்கள், தேங்காய், மஞ்சள், வாழை ஆகியவற்றை சந்தைப்படுத்த புவிசார் குறியீட்டை அடிப்படையாக கொண்ட தமிழ் இயல் என்னும் புதிய பிராண்ட் உருவாக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்த திட்டங்கள் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.