தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ஆம்னி பேருந்துகள் 2ஆவது நாளாக எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. முறையாக சாலை வரி செலுத்தவில்லை எனக்கூறி 30 தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்து கேரள போக்குவரத்து துறை சிறைபிடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள அரசின் நடவடிக்கையால் கடந்த வெள்ளி (07) இரவு முதல் தமிழக ஆம்னி பேருந்துகள் அந்த மாநிலத்திற்கு இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.