சென்னை கிண்டியில் நடைபெற்ற "டவுன்ஹால்" நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், "ஊழல்வாதிகளை மிரட்டியே தமிழகத்தில் என்டிஏ கூட்டணி அமைத்துள்ளது. தமிழக தேர்தல் களத்தில் பலமுனை போட்டிகள் நிலவினாலும், திமுகவிற்கு எதிராக பலம் பொருந்திய போட்டி ஏதுமில்லை" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவின் அரசியல் அழுத்தங்களுக்கு பணிந்து அமைக்கப்பட்ட NDA கூட்டணி மக்களிடத்தில் எடுபடாது என்று அவர் கூறியுள்ளார்.