"இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்".. அமைச்சர் ரகுபதி

“சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று மக்கள் மத்தியில் பீதியை உருவாக்க முயற்சிக்கிறார் பழனிசாமி” என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (பிப்.19) பேசிய அவர், “இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். குற்றச் செயல்கள் தமிழ்நாட்டில் மிகவும் குறைவாக உள்ளன. பெண்கள் இரவு 11 மணி அளவிலும் பேருந்தில் இருந்து இறங்கி தனியாக வீட்டிற்கு நடந்து செல்கிறார்கள். அதனை எதிர்க்கட்சித் தலைவர் நேரில் வந்து பார்த்து கொள்ளலாம்” என்றார்.

தொடர்புடைய செய்தி