சட்டப்பேரவையில் 2026-27-ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (பிப்.17) தாக்கல் செய்ய இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசின் குறுகிய கால செலவினங்களுக்காக இந்த பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு, இளைஞர்கள், சிறுபான்மையினர் மற்றும் இல்லத்தரசிகளை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் நலத்திட்டங்கள் இதில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.