எச்.வினோத் இயக்கத்தில் CM விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை (ஜூலை 23) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் முதல் நாளே திரையில் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் சூழலில், திருப்பூரை சேர்ந்த ‘ஃபுட்ஸ் பை டீகே’ உணவு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது.