தமிழ்நாடு தகவல் ஆணையம் விரிவாக்கம்.. கூடுதலாக 2 ஆணையர்கள் நியமனம்

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க கூடுதலாக 2 தகவல் ஆணையர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் படி, ஆணையத்தில் ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் 10 ஆணையர்கள் வரை இருக்கலாம் என்ற விதியின் அடிப்படையில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது. 2005-ல் 2 ஆணையர்களுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, நிர்வாக தேவைகளுக்காக தற்போது மீண்டும் வலுப்படுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி