’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் வாக்காளர்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி எண்களை பெற திமுக நிர்வாகிகளுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை இன்று (ஜூலை 21) இடைக்கால தடைவிதித்துள்ளது. அதே நேரம் திமுக உறுப்பினர்கள் சேர்க்கைக்கு தடை இல்லை என கூறப்பட்டுள்ளது. சிவகங்கையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு, திமுக பொதுச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி: பாலிமர்