பெண்களுக்கு இலவச தையல் மெஷின் வழங்கும் தமிழக அரசு

தமிழக அரசின் 'சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு திட்டத்தின்' கீழ் ஏழை பெண்களுக்கு சுயதொழில் தொடங்க இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் பெண்கள் 6 மாத தையல் பயிற்சி முடித்தவராகவும், 40 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்கும் தகுதியுடைய பெண்கள், கூடுதல் விவரங்களை அறிய www.tnsocialwelfare.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

தொடர்புடைய செய்தி