தமிழகத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்திருந்தனர். போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தைக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்தது. இந்நிலையில், அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்பேரில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
நன்றி: NewsTamilTV24x7