ஐடிஐ-களுக்கான 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ. 750/- வழங்கப்படும். அதோடு, தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.