'சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களைப் பாதுகாக்க வேண்டும்': சிபிஐ

அடிப்படை பரிசோதனை முடிவுகளில் மருத்துவர்கள் கையெழுத்திட வேண்டும் என்ற அரசாணை எண் 41-ஐ ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். "இவ்விதியால் 15,000-க்கும் மேற்பட்ட சிறிய லேப்கள் மூடப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களே பயனடையும்; ஏழை மக்களின் நலன் மற்றும் லேப் டெக்னீசியன்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசாணையை அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்தி

✕
✕