வேலுநாச்சியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு மரியாதை

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், நாளை (ஜன., 03) காலை 9.30 மணியளவில் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம் சூரக்குளத்தில் அமைந்துள்ள வேலுநாச்சியாரின் நினைவு மண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி