தமிழகத்தில் ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (ஜூன் 4) உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை காவல் ஆணையராக கபில் குமார் சரத்கரும், சென்னை மேற்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக திஷா மிட்டலும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ரயில்வே போலீஸ் ஐ.ஜி.யாக அபிஷேக் தீக்ஷித், நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக திருநாவுக்கரசு உள்ளிட்ட ஏழு அதிகாரிகள் புதிய பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நன்றி:Polimer