தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்புப் பட்டியலில் இருந்த டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் குமார் காவல்துறை அகாடமி டி.ஜி.பி-யாகவும், முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலன் அதே அகாடமியின் கூடுதல் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு இன்று இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நன்றி: நியூஸ் 18