கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாநில தகவல் ஆணையம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, அனைத்து தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தங்கள் வகுப்பு வாரியான கட்டண விவரத்தைப் பள்ளி வாயில் பெயர்ப்பலகையில் கட்டாயம் ஒட்ட வேண்டும். மேலும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களிலும் முழுமையான கட்டண விவரம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.