காவிரி நீர் திறப்பு தொடர்பாகத் தமிழகத்திலிருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்த நிலையில், நடப்பு மாதத்தில் இதுவரை தமிழகத்திற்கு 2.9 டி.எம்.சி நீர் திறக்கப்பட்டுள்ளதாகக் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கபினி அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் அங்கிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், அதேநேரம் கர்நாடகாவின் குடிநீர் தேவைகளுக்காக 40 டி.எம்.சி நீரை இருப்பில் வைக்க வேண்டிய கட்டாயம் அம்மாநிலத்திற்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: நியூஸ் 18