தமிழக அரசு தற்போது நிதிச்சுமையில் உள்ளது.. நீதிமன்றத்தில் வாதம்

தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரண தொகையை ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி நாதக வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தொடர்ந்த பொதுநல வழக்கு, இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தற்போது நிதிச்சுமையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அரசு வழக்கறிஞர், இதுகுறித்து அரசிடம் விளக்கம் பெறக் கால அவகாசம் கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.

தொடர்புடைய செய்தி