2016–2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2016 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை பெறும் விருதாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 13 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்.