சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்பவரை விடுதலை செய்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது. தஷ்வந்த்தை விடுதலை செய்த தீர்ப்பைத் திருத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2017-ல் நடந்த இச்சம்பவத்தில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.