தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 4.5 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடகம் அதை செயல்படுத்தாததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது உள்ள சூழலில் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என சிவக்குமார் தெரிவித்துள்ளார்.