தமிழ்நாடு அரசு, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அவர் மீது அமல்படுத்தப்பட்டிருந்த குண்டாஸ் சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், வேறு எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லாவிட்டால் சவுக்கு சங்கர் உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.