தமிழ்நாடு அரசு, மே 13 முதல் மே 22 ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்துள்ளது. அதன்படி ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. அதேபோல், பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, சென்னை மாநகராட்சி,நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் குறுகிய கால டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நன்றி: polimer