தமிழகத்தில் எம்-சாண்ட் மற்றும் கட்டுமான கற்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கனிமங்கள் கடத்தல் தடுப்பு விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. இதன் மூலம், கனிமங்கள் சட்டவிரோதமாக வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுப்பதற்கான முழு அதிகாரமும் சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் கனிம வளங்கள் பாதுகாக்கப்படுவதோடு, உள்ளூர் கட்டுமான தேவைகளும் தடையின்றி பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.