சென்னை தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. ரோடு ஷோ நடத்தக்கூடாது என சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழக அரசு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. பொதுச் சொத்து சேதங்களுக்கு அபராதம், கூட்டங்களை கண்காணிக்க குழு அமைப்பு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.