அரசின் மானியங்கள் மற்றும் பயிர் காப்பீடு போன்ற நிதி உதவிகள் (DBT) நேரடியாக கிடைப்பதை உறுதி செய்ய, தமிழக விவசாயிகள் அனைவரும் பிரத்யேக 'விவசாய அடையாள அட்டை' வைத்திருப்பது கட்டாயம் என வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது. தகுதியுள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி இந்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். நலத்திட்டங்களை பெற இனி இந்த அடையாள எண் மிக முக்கிய ஆவணமாக கருதப்படும் என கூறப்பட்டுள்ளது.