தமிழகத்தின் பொருளாதார ஆற்றல் காரணமாக, மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் இருப்பதாக பாமக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் இன்று (நவ.13) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னை, கோவை போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பயங்கரவாதிகளை ஈர்க்கும் இலக்குகளாக இருக்கும். இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பயங்கரவாத அச்சுறுத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.