மதராசி முகாம் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். "பல தசாப்தங்களாக டெல்லியின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பை அளித்து வந்த 370 தமிழ் வம்சாவளி குடும்பங்கள் வீடற்றவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும் மாறியுள்ளனர்.189 EWS குடியிருப்புகளை கட்டி உரிமை பெற்ற குடும்பங்களுக்கு ஒப்படைக்க வேண்டும். மீதமுள்ள 181 குடும்பங்களுக்கு குடிசை மற்றும் ஜேஜே மறுவாழ்வுக் கொள்கையின் கீழ் EWS வீட்டுத் தகுதியை விரிவுபடுத்த வேண்டும்" என்றார்.