நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜூன் 11-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மீண்டும் டெல்லி செல்லவுள்ளார். தவெக தலைவராகப் பொறுப்பேற்று, முதல்வரான பிறகு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது டெல்லி பயணம் இதுவாகும். இந்த அரசுமுறைப் பயணத்தின் போது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.