தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு ஜோசப் விஜய் முதன்முறையாகத் தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்துள்ளார். இன்று மாலை 4.30 மணிக்கு அவர் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகிறார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார். இன்று டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி ஓய்வெடுக்கும் முதல்வர் விஜய், நாளை சென்னை திரும்புகிறார்.
நன்றி: நியூஸ் 18