இந்தியாவில் பாலியல் தொழிலை ஒரு தொழிலாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், விருப்பப்பட்டு இதில் ஈடுபடும் பெரியவர்கள் மீது காவல்துறை எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கவோ, அவர்களை துன்புறுத்தவோ கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வயது வந்தவர்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் இத்தொழிலில் ஈடுபடும்போது, அவர்களை மிரட்டுவதற்கு போலீசாருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.