தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளன. சென்னையில் பிப். 24ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தலைநகரில் மட்டும் 33 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. தியாகராயநகர், ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இங்கு குறைந்த விலைக்கு மருந்து, மாத்திரைகளை மக்கள் வாங்கலாம்.