முழு எழுத்தறிவு (100%) இலக்கை நோக்கி தமிழ்நாடு புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 23,640 தேர்வு மையங்களில் நேற்று (நவ.15) நடைபெற்ற எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு தேர்வில் சுமார் 4.45 லட்சம் பேர் ஆர்வத்துடன் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 98% எழுத்தறிவு கொண்ட மாநிலமாக திகழும் தமிழ்நாடு, இந்த தேர்வின் முடிவுகளுக்கு பிறகு விரைவில் 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.