தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கேரளா மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மார்ச் 12) பகல் 12.30 மணியளவில் கிண்டி மக்கள்பவனில் பதவி ஏற்கிறார். தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்குவங்க மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழக பொறுப்பு ஆளுநராக அறிவிக்கப்பட்டார். நள்ளிரவு 12.15 மணியளவில் கொச்சியில் இருந்து சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.