இந்தியாவிலேயே முதன்முதலாக எஸ்.எஸ்.ஆர் எம்.எல்.ஏ ஆனதைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் நடிகர்களின் ஆதிக்கம் தொடங்கியது. முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொடங்கி எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த், நெப்போலியன், சரத்குமார், டி.ராஜேந்தர், கருணாஸ் எனப் பல நடிகர்கள் சட்டமன்றத்திற்குத் தேர்வாகினர். இந்த வரிசையில் தவெக தலைவர் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களாக வலம் வருகின்றனர்.