‘ரங்கூன்’, ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ போன்ற படங்களில் நடித்த, பிரபல நடிகை சனா மக்புல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில காலமாக கல்லீரல் அழற்சி நோயால் சனா அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், சனாவின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சில வருடங்களுக்கு முன் சனாவின் வளர்ப்பு நாய் அவரது உதட்டை கடித்ததில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து 121 தையல்கள் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.