கோவை இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. சென்னையில் இன்று (நவ.8) பேட்டியளித்த அவர், "நேரங்கெட்ட நேரத்தில் பெண்கள் வெளியில் சுற்ற கூடாது. தவிர்க்கவே முடியாத சூழல் என்றால் ரூம் போட்டுப் பேசுங்கள்" என்று அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அவரவர் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நன்றி:NewsTamil24x7