அம்மா வீட்டிற்கு கூட்டிட்டு போ.. வளர்ப்பு பெற்றோருடன் சிறுவன் மீண்டும் ஒப்படைப்பு

தெலங்கானாவில் முறைப்படி தத்தெடுக்கப்படவில்லை என காப்பகத்தில் சேர்க்கப்பட்ட சிறுவன் மகேஷ் (3), "அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போ" என கதறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 5 நாள் குழந்தையாக இருந்தபோதிலிருந்து வளர்த்து வந்த ஸ்ரீனிவாஸ்-சரிதா தம்பதியிடமிருந்து பிரிக்கப்பட்ட அக்குழந்தையை மீட்க அவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகினர். இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மற்றும் மாவட்ட ஆட்சியரின் விரைவு நடவடிக்கையை தொடர்ந்து, அக்குழந்தை மீண்டும் வளர்ப்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி

✕
✕