கர்நாடகாவில் "தக் லைஃப்" வெளியீடு ஒத்திவைப்பு

கர்நாடகாவில் நடிகர் கமல்ஹாசனின் "தக் லைஃப்" வெளியீடு ஒத்திவைப்பட்டுள்ளது. கமல்ஹாசன் கடிதம் திருப்தியாக உள்ளது. ஆனால், அதில் ஒரு வார்த்தையை சேர்க்க வேண்டும். மன்னிப்பு என்ற வார்த்தை விடுபட்டுள்ளது என கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஃபிலிம் சேம்பர் உடனான பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படும் வரை "தக் லைஃப்" வெளியீடு இல்லை. உடன்பாடு ஏற்படும் வரை தயாரிப்பு நிறுவனமே படத்தை வெளியிட விரும்பவில்லை என்று கூறிய நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்தி