ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் குரூப் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் இன்று (பிப்.7) அமெரிக்காவை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில், இந்திய அணி வெற்றியுடன் தொடரை தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவிடம் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அமெரிக்கா, இன்று புதிய உத்திகளுடன் களமிறங்க தயாராகி வருகிறது.