இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்த அட்டவணை, வரும் 25-ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தற்போது அதிகரித்துள்ளது.