RSS தொண்டராக தன் பொதுவாழ்க்கையை தொடங்கிய மோடி, பாஜகவின் தீவிர உழைப்பால் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து பல ஆண்டுகள் திறம்பட ஆட்சி நடத்தினார். 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற அவர், பல மக்கள் நல திட்டங்களால் உலகளவில் கவனம்பெறும் தலைவராக உருவெடுத்தார். தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்திய அரசியலில் தனக்கென ஒரு வலுவான முத்திரையை பதித்து வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.