அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்ததாக கூறுவது தவறு என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மறுத்துள்ளார். 5 வாக்குறுதிகள் அறிவித்ததும் திமுக ஆட்டம் கண்டதாக கூறிய அவர், மீண்டும் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்தார். மேலும், டிடிவி தினகரனை கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சிப்பது தவறல்ல; அது அவர்களின் பெருந்தன்மை என அவர் கூறினார்.
நன்றி: ABP