5 ஆண்டுகளுக்குள் வேலை மாறினாலும், பழைய பிஎப் கணக்கை புதிய நிறுவனத்திற்கு முறையாக மாற்றினால் வருமான வரி இன்றி பணத்தை பெற முடியும். ஆனால், பிஎப் பங்களிப்பு இல்லாத 'NCP' நாட்கள் உங்கள் மொத்த 10 ஆண்டு பணிக்கால கணக்கீட்டிலிருந்து கழிக்கப்படும் என்பதால், இது ஓய்வூதிய தகுதியை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, அடிக்கடி வேலை மாறுபவர்கள் தங்கள் UAN எண்ணை பயன்படுத்தி கணக்குகளைத் தொடர்ச்சியாகப் பராமரிப்பது எதிர்கால பென்ஷன் பாதுகாப்பிற்கு மிக அவசியமாகும்.