சுசுகி நிறுவனம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி புதிய ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. சமீபத்தில் வெளியான இதன் டீசரில், இது 'பர்க்மேன் ஸ்டிரீட்' போன்ற தோற்றமுடைய மேக்சி ஸ்கூட்டராக இருக்கும் எனத் தெரிகிறது. இது 150சிசி மாடலா அல்லது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இது 150சிசி-யாக இருக்கும் பட்சத்தில், யமஹா ஏரோக்ஸ் 155, ஹீரோ சூம் 160 போன்ற மாடல்களுக்குக் கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.